Mushroom Cheese Sandwich : நாவூற வைக்கும் காளான் சீஸ் சான்விச்... செய்முறை விளக்கம் இதோ!
காளான் சீஸ் சான்விச் செய்ய தேவையான பொருட்கள் : காளான் - 400 கிராம், பிரட் துண்டுகள், சீஸ் ஸ்லைஸ், பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது, பூண்டு - 3 பற்கள் நறுக்கியது, உப்பில்லாத வெண்ணை - 1 தேக்கரண்டி, இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, எண்ணெய், மிளகு தூள், உப்பு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கிய பின், அதில் காளான் துண்டுகள், உப்பு, மிளகு தோல் மற்றும் உப்பில்லாத வெண்ணை சேர்த்து நன்கு கிளறவும்.
இதில் இட்டாலியன் சீசனின் சேர்த்து நன்கு கிளறவும். காளான் நன்கு வதங்கி, மசாலாவில் நீரில்லாமல் வற்றும் வரை வதக்கவும்.
இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து அதில் வெண்ணெயைத் தடவவும். ஒரு துண்டின் மீது செய்த காளான் கலவையை வைத்து, அதன் மேல் ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து மற்றொரு பிரெட் துண்டால் மூடவும்.
பேனில் வெண்ணை தடவி, செய்து வைத்த சான்விச்சை அதில் வைத்து, ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு நிமிடம் வரை டோஸ்ட் செய்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் சீஸ் சான்விச் தயார்.
குழந்தைகளுக்கு இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும். இதை மதிய உணவாகவும் கொடுக்கலாம்.சான்விச் செய்ய கோதுமை பிரட் பயன்படுத்துவது நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -