Meen Pollichathu : கேரளா ஸ்டைல் பொளிச்ச மீன் செய்வது எப்படி?
கடல் உணவுகளில் மீன்கள் ருசியானது மற்றும் ப்ரோட்டீன் சத்து நிறைந்தது. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள ஒமேகா 3 ஆசிட் இருப்பதால் உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மீனை வைத்து மீன் பொளிச்சது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க....
தேவையான பொருட்கள் : குறைவான முட்கள் உள்ள ஏதாவது ஒரு மீன் 1/2 கி, சோம்பு 1 தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஓரு தேக்கரண்டி, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு 2 பல், வரமிளகாய் 7, உப்பு தேவையான அளவு, வாழை இலை.
முதலில் சோம்பு, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு வரமிளகாயை கடாயில் எண்ணையை ஊற்றாமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.வறுத்து அரைத்து எடுத்த மசாலாவை கழுவி வைத்த மீனுடன் சேர்த்து 1 மணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். இப்பொழுது இந்த மீன் பொளிச்சதை 2 முறைகளில் செய்யலாம்.
மசாலா தடவி ஊறவைத்துள்ள மீனை எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து இட்லி வேக வைப்பதுபோல் மூடி வைத்து, நீராவியில் வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான மீன் பொளிச்சது தயார். இது நீராவியில் வேக வைப்பதால் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும்.
மற்றொரு முறை : மசாலா தடவிய மீனை இலையில் மடித்து கட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மடித்துவைத்த மீனை போட்டு வறுக்க வேண்டும். 15 நிமிடம் இருபுறமும் திருப்பி போட்டு வறுத்து இறக்கினால் மீன் பொளிச்சது தயார். இது ரசம் சாதம், நெய் சோறு ஆகியவற்றிற்கு ஏற்ற காம்போ ஆகும்.