Chocolate ice cream recipe: கொளுத்தும் வெயிலுக்கு குளு குளு சாக்லேட் ஐஸ்க்ரீம்..ரெசிபி இதோ..
கோடை காலத்தின் இறுதி கட்டத்தை நெருங்கினாலும் வெயில் குறைந்தப் பாடில்லை. கொளுத்தும் வெயிலை சமாளிக்க இதோ இந்த சாக்லேட் ஐஸ்க்ரீமை வீட்டில் செய்து அசத்துங்கள்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: சாக்லேட் கனாஷ் செய்ய முழு கொழுப்புள்ள பால் - 1/4 கப், பிரெஷ் கிரீம் - 1/4 கப், செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் - 250 கிராம், கோகோ பவுடர் - 1 மேசைக்கரண்டி, சர்க்கரை - 4 மேசைக்கரண்டி, சாக்லேட் ஐஸ் கிரீம் செய்ய பிரெஷ் கிரீம் - 450 கிராம் சாக்லேட் கனாஷ்
செய்முறை: முதலில் சாக்லேட்'டை சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு பேன்'னை சூடு செய்து பால், பிரெஷ் கிரீம் மற்றும் சாக்லேட் துண்டுகள் சேர்த்து கிளறவும்.
சாக்லேட் கரைந்ததும், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து கிளறி விட்டால் சாக்லேட் கனாஷ் தயார். இதனை, முழுமையாக ஆறவிடவேண்டும்.
பிறகு, குளிர்வூட்ட பட்ட பிரெஷ் கிரீம் எடுத்து 2 நிமிடம் பீட் செய்யவும். இதில் சாக்லேட் கனாஷ் சேர்த்து 1 நிமிடம் நன்றாக பீட் செய்யவும்.
இறுதியாக சின்ன பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் ப்ரிஸர்'ல் வைக்கவும். அவ்வளவு தான் சாக்லேட் ஐஸ்க்ரீம் ரெடி! பின் குறிப்பு: பரிமாறும் முன் 5 நிமிடம் வெளியில் வைத்து பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -