Kashmiri Pulao: சுவையான காஷ்மீர் ஸ்டைல் புலார்வ்- எப்படி செய்வது?
புலாவ் வகை உணவுகள் பிடிக்கும் என்பவர்கள் காஷ்மீரி புலாவ் வகைகளை செய்து பார்க்கலாம். தேவையான பொருட்கள் என்னென்ன? பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மிலி) நெய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் முந்திரி பருப்பு - 1/2 கப் பாதாம் - 1/2 கப் உலர்ந்த திராட்சை - 1/4 கப் வெங்காயம் - 1 கப் நீளவாக்கில் நறுக்கியது பட்டை - 4 துண்டு கிராம்பு - 6 பச்சை ஏலக்காய் - 4 கருப்பு ஏலக்காய் - 2 பிரியாணி இலை - 2 சோம்பு - 1/2 டீ ஸ்பூன் ஷாஹி ஜீரா - 1 டீ ஸ்பூன் சூடு தண்ணீர் - 2 கப் குங்குமப்பூ பால் உப்பு மாதுளை பழம் அன்னாசி பழம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும். ஒரு பானில் நெய் ஊற்றி, நெய் உருகியதும், முந்திரி, பாதாம், திராட்சை இவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, வெங்காயத்தை சேர்த்து மொறுமொறுப்பாக வறுக்கவும். கடாயில் நெய் ஊற்றி, நெய் உருகியதும், பட்டை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, ஷாஹி ஜீரா, ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
அடுத்து ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து 2 நிமிடம் கலந்து விடவும். பின்பு சூடு தண்ணீரை சேர்த்து கலந்து விடவும்.
பிறகு உப்பு, குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து விட்டு, 10 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும். அடுத்து வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் வெங்காயத்தை மேலே தூவவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -