Masala Noodles: ஸ்பெசல் மசாலா நூடுல்ஸ் செய்முறை இதோ!
நூடுல்ஸ் பிடிக்கும் என்பவர்கள் மசாலா நூடுல்ஸ் ட்ரை செய்து பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் ரமேன் நூடுல்ஸ் - 4 பாக்கெட் எண்ணெய் - 2 டீ ஸ்பூன் பூண்டு - 2 டீஸ்பூன் நறுக்கியது இஞ்சி - 1 டீ ஸ்பூ நறுக்கியது வெங்காயம் - 1/2 நறுக்கியது கேரட் - 1/2 கப் நறுக்கியது முட்டைகோஸ் - 1/2 கப் நறுக்கியது சிவப்பு குடைமிளகாய் - 1/4 கப் நறுக்கியது பச்சை குடைமிளகாய் -1/4 கப் நறுக்கியது உப்பு - 2 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி சீரக தூள் - 1/2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சாட் மசாலா தூள் - 2 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி சோயா சாஸ் - 2 தேக்கரண்டி வெங்காயத்தாள் வெங்காயம் வெங்காயத்தாள்
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு உப்பு சேர்த்து ரமேன் நூடுல்ஸ்சை சேர்த்து வேகவிடவும். . சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்துவிடவும். நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீர் இன்றி வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து கலந்துவிடவும்.
நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். உப்பு, மிளகு தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா தூள், சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து கலந்துவிடவும். நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து கலந்து வேகவைத்த நூடுல்ஸ்சை சேர்த்து கலந்துவிடவும். நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து கிளறி இறக்கினால் நூடுல்ஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -