Shampoo Ingredients | `நீங்கள் தினமும் ஷாம்பூ பயன்படுத்துபவரா?’ - அப்போ இதைத் தவறாம படிங்க!
சரும நிபுணரும் மருத்துவருமான ஜெய்ஸ்ரீ ஷரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் தலைமுடியின் வகைக்கு ஏற்ப தினமும் ஷாம்பூ பயன்படுத்துவது குறித்து கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், `தினமும் ஷாம்பூ பயன்படுத்துபவர் என்றால் இயற்கை முறையில் பின்விளைவுகளை ஏற்படுத்தாத பொருள்களைப் பயன்படுத்துங்கள்’ எனப் பரிந்துரை அளித்துள்ளார். image 1
உங்கள் தலையில் இறந்த செல்கள், தூசி, வியர்வை, எண்ணெய், பொடுகு ஆகியவற்றின் காரணமாக அதிகமாக அரிப்பு ஏற்படுகிறது.
உங்கள் தலையில் அதிகமாக வியர்வை சுரக்கிறது..உங்கள் தலை பிசுபிசுப்பாக இருக்கிறது.
உங்கள் தலைமுடியின் பாதுகாப்புக்காக அதிகளவில் அழகுப் பொருள்களைப் பயன்படுத்துகிறீர்கள்.
நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது முதலான பழக்கங்களைக் கொண்டவர்.
இந்தக் காரணங்கள் இருப்பவர்கள் மட்டுமே தினமும் ஷாம்பூ பயன்படுத்தலாம் என மருத்துவர் ஜெய்ஸ்ரீ ஷரத் பரிந்துரைத்துள்ளார்.