இரவு தூங்க செல்வதற்கு முன் பால் குடிப்பது நல்லதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு க்ளாஸ் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இருக்கின்றனர். இது பலருக்கும் சீக்கிரம் தூக்கம் வருவதற்கு உதவும். அப்படியிருக்கையில் இது நன்மை தருமா என்பது பற்றி நிபுணர்கள் சொல்வதை காணலாம்.
தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பது உங்களை ஃபுல்லாக உணர வைக்கும். இது தூக்கத்தின் தரத்தையும் உயர்த்தும். ட்ரைப்போடொஃபைன் இருப்பதால் இது தூக்கத்தை வரவழைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது நன்றாக தூங்க உதவும் என்று சொல்லப்படுகிறது.
பால் கால்சியம் நிறைந்தது என்பதால் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். பாலில் வைட்டமின் டி யும் இருக்கிறது.
பால் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். அப்படியிருக்க, செரிமான மண்டலம் சீராக செயல்படாதவர்கள் இரவில் பால் குடிப்பதை தவிர்க்கவும்.
இரவு நேரத்தில் பால் குடிப்பது எல்லாருக்கும் நன்மையாக இருக்காது என்று தெரிவிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். செரிமான திறன் அதிகம் இருப்பவர்கள் குடிப்பதில் சிக்கல் இல்லை. இல்லையெனில் செரிமா கோளாறு ஏற்படும் வாய்ப்புஇருப்பதாக தெரிவிக்கின்றனர்.