வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கோங்க!
தர்பூசணியின் ஒரு கீற்றில் ஒரு நாளுக்கு உடலுக்குத் தேவையான 16 சதவிகித வைட்டமின் சி கிடைத்து விடுகிறது. வைட்டமின் சி எதிர்ப்புத் திறனை உறுதிபடுத்தத் தேவையான அடிப்படை சத்து என்பது அனைவருக்கும் தெரியும்,
காலை உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பது என்பது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவும். மேலும், இது அந்த நாளுக்கான ஆற்றலை வழங்கும். தர்பூசணி ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளில் ஒன்றாகத் இருக்கிறது. 95% நீர்ச்சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த பழம்.
அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட தர்பூசணியை பலர் காலை உணவோடு சாப்பிடலாம். வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது நல்லதா?
ஊட்டச்சத்து நிபுணர் அனுபமா மேனன், தெரிவிக்கையில் “வெற்று வயிற்றில் பழங்களை சாப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட உடல் மற்றும் ஹார்மோன் செயல்பாட்டின் அடிப்படையில் பயனளிக்கலாம் அல்லது பயனளிக்காமல் போகலாம். leptin secretion அல்லது இன்சுலின் எதிர்திறன் இருந்தால், காலை உணவில் பழங்கள் சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்காது.
வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடக்கூடாது. பழத்தை மற்ற நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் ஸ்நாக்ஸ் போல உட்கொள்ளலாம். அப்படி செய்தால், குறிப்பிட்ட காலத்திற்கு, உடலில் அதிகப்படியான லெப்டின் சுரப்பதால் (உற்பத்தி செய்யப்படுகிறது) கொழுப்பு திசுக்களால்), உணர்திறன் குறைந்து, பிரக்டோஸ் சகிப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது, அதனால் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தி மற்றும் சேமிப்பை ஏற்படுத்துகிறது என்று விளக்கமளித்துள்ளார்.