Diwali Decoration Ideas:தீபாவளி வந்தாச்சு; வீட்டை ரம்மியமாக அலங்கரிக்க சில டிப்ஸ் இதோ!
ன்னும் ஒருவாரம்தான்; தீபாவளி(Deepavali) வந்தாச்சு; புத்தாடைகள் வாங்குவது, இனிப்பு, பல்கார வகைகள் செய்வது என நம் அனைவரின் வீடுகளிலும் பிஸியாக வேலைகள் நடந்து கொண்டிருக்கும்.
தீபாவளி நேரத்தில் வீட்டை அலங்கரிக்க என்னல்லாம் செய்யலாம். என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம். ரொம்ப பெரிய மெனக்கடல் இல்லாமல் சின்ன சின்ன பொருள்ட்களை வைத்து தீபாவளி நாளன்று நம் வீட்டை ஜொலிக்க செய்யலாம்.
மலர்கள் புத்துணர்ச்சியை தர வல்லது. ஓணம் விழாவின்போது அத்த பூ கோலம் போடுவது போல தீபாவளியன்று பூக்களை கொண்டு தோரணங்கள் செய்யலாம். ஜன்னல் உள்ளிட்ட முக்கிய கதவுகளை பூக்களை கொண்டு அலங்கரிக்கலாம். மஞ்சள் சாமந்தி, வெள்ளை சாமந்தி, ரோஜா மலர்களை அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.
தீபங்களால் ஒளிரும் நாள் தீபாவளி; தீபாவளி அன்று மாலை விளக்குகளால் வீட்டை அலங்கரித்தால் ரம்மியமாக இருக்கும். உறவுகள் சூழ தீபத்துடன் கதைப் பேசி கொண்டாடலாம். மண் விளக்குகள், எலக்ர்டிக் வண்ண மின் விளக்குகள் என எதுவானும் உங்க சாய்ஸ்.
அதோடு மெழுகுவத்தி Fragrance oils burner கடைகளில் கிடைக்கும். லேவண்டர், மல்லிகை, லெமன்கிராஸ் உள்ளிட்ட எண்ணெய் அறையை நல்ல நறுமனத்துடன் வைக்க உதவும். அவற்றை வாங்கியும் பயன்படுத்தலாம். விழாக்காலங்கள் மட்டுமல்லமால மற்ற நேரங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
தீபாவளி அன்றைக்கு முந்தைய நாளே வீட்டை அலங்கரித்து வைப்பது நல்லது. மலர் அலங்காரம் இல்லாமல் மற்ற தோரணங்கள், வண்ண பெயிண்ட்களால் கோலம் வரைதல் உள்ளிட்டவற்றை முந்தைய நாளே செய்துவிடலாம்.