Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Herbal Tea:அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் இருக்கா?இந்த ஹெர்பல் டீ வகைகள் டயட்டில் இருக்கட்டும்!
ஹெர்பல் டீ குடல் ஆரோக்கிய பாதிப்பில் இருந்து மீளவும், அதன் விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, உடலில் ஹார்மோன் சீரின்மையால் ஏற்படும் மாற்றங்களை உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் சரிசெய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுதினா டீ ஏற்படும் ஹார்மோன் சீரற்றதன்மையை குறைக்க உதவுகிறது. இளஞ்சூட்டில் தினமும் புதினா டீ குடிப்பது நல்லது. இதோடு எலும்பிச்சை பழச் சாறும் சேர்த்து குடிக்கலாம்.
உடலில் உள்ள இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக்கொள்ள இந்த கிரீன் டீ சிறந்த சாய்ஸ். இதில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட் தன்மை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. பி.சி.ஓ.எஸ்., அறிகுறிகள் இருப்பவர்களும், உடல் எடை அதிகரிக்கிறது என்று நினைப்பவர்களும் இதை அருந்தலாம். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க கிரீன் டீ-யை டயட்டில் சேர்ப்பது நல்ல பலன் தரும் என்கின்றனர் நிபுணர்கள்.
சமையலில் சிறிதளவு இஞ்சி சேர்க்கப்படுவது செரிமானத்திற்கு உதவும் என்பதால். அதே நேரம் இஞ்சியில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவும். உடலில் ஈஸ்டோரெஜன் அளவை சீராக்க இந்த இஞ்சி டீ உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி- இன்ஃபேலேமேட்ரி திறன் உடல் வலி, தலைவலி உள்ளிட்டவைகள் வராமல் தடுக்கிறது. காலை அல்லது மாலை என எப்போது வேண்டுமாலும் இஞ்சி டீ குடிக்கலாம். இதோடு எலும்பிச்சை மற்றும் தேன் கலந்தும் குடிக்கலாம். சோம்பு சேர்த்தும் இஞ்சி டீ குடிக்கலாம்
அதிமதுரத்தில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அது பி.சி.ஓ.எஸ்.-க்கு எப்படி உதவுகிறது என்றால், உடலில் டெஸ்டோரெசன் அளவை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும், அதிமதுர டீ குடிப்பதால், எதாவது இனிப்பாக சாப்பிட வேண்டும் என்ற ஆசைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த டீயை தவிர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -