Copper Utensil Benefits: உணவுப் பொருள்களை காப்பர் பாத்திரங்களில் வைக்கலாமா?நன்மைகள் என்னென்ன?
செம்புப் பாத்திரங்கள் உடலுக்கு நன்மைகள் தரும். உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இ.கோலி (E. Coli) மற்றும் Staphylococcus aureus பாக்டீரியாக்களை, செம்பில் உள்ள சத்துகள் அழித்துவிடும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்பவர்கள் , செம்புப் பாத்திரங்களில் தண்ணீரைச் சேமித்துப் பயன்படுத்துவது கண்டிப்பாக நல்ல பலனைத் தரும்.
உடல் சூட்டினை சீராக வைக்கும் தன்மை செம்பில் இருக்கிறது. இதனால், கொழுப்புச் சத்தைக் குறைத்து, செரிமானக் கோளாறுகளை நீக்கும்.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பது மிகவும் நல்லது. சரும பாதிப்புகள் நீங்கும்.
குழம்பு மற்றும் பொரியல், கூட்டு வகைகளைப் போன்று புளி சேர்த்து சமைக்கும் எந்த உணவையும் செம்புப் பாத்திரத்தில் சேமித்து வைக்கக் கூடாது. செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு பரிமாறலாம். சாதம் வடிப்பவர்கள், செம்புப் பாத்திரங்களில் சாதம் வடிக்கலாம்.
செம்பின் முழு நன்மைகளைப் பெறவிரும்புபவர்கள், ஈயம் எதுவும் பூசாத செம்புப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -