Yoga For Gas and Bloating : வாயு, உப்புசத்தை போக்கும் டாப் 5 யோகாசனங்கள்!
முதலில் அபனாசனா, தரையில் படுத்துக்கொண்டு மூச்சை உள்வாங்க வேண்டும். பின் மூச்சை வெளியிட்டு முட்டியை நெஞ்சு பகுதிக்கு கொண்டு வர வேண்டும் சில நொடிகளுக்கு பின்னர் ரிலாக்ஸ் செய்யலாம். இதே பயிற்சியை 5-6 முறை செய்ய வேண்டும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரண்டாவது பாலாசனா, முட்டியிட்டு கைகளை முன்னோக்கி வைத்து குனிய வேண்டும். முதுகு பகுதி வளையாமல் நேராக இருப்பதை உறுதிப்படுத்தவும். தலை பகுதியை ஏதாவது தலையணை மீது வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து ரிலாக்ஸ் செய்யலாம்
மூன்றாவது, அதோ முக ஸ்வனாசனா. இந்த போஸில் நம் உடல் பார்பதற்கு பாலம் போல் இருக்கும். இதில் இடுப்பு மற்றும் புட்டம் மேல்நோக்கி இருக்க வேண்டும். சில நொடிகளுக்கு பின் ரிலாக்ஸ் செய்யலாம்
நான்காவது உத்தனாசனம், பின்நோக்கி இருக்கும் உடம்பை முன்புறமாக வளைத்து பாதத்தை தொடும் வரை குனிய வேண்டும். இப்படி குனியும் போது உங்கள் கால்களை மடக்காமல் இருக்க வேண்டும்.
ஐந்தாவது மூச்சை உள்வாங்கி வெளியேற்றும் பிராணாயாமம் செய்யலாம். இந்த பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்யலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -