International Yoga Day 2024: தலைமுடி உதிர்வுக்கு தீர்வு வேண்டுமா? இந்த யோகாசனங்களை செய்யலாம்!
Balayam Mudra தலைமுடி உதிர்வை குறைத்து வளர்ச்சிக்கு உதவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBalasana - குழந்தை தூங்குவது போன்ற தோற்றத்தைத் தரும் ஆசனம், 'பாலாசனம்’. ஆங்கிலத்தில் ‘Child pose’ என்பார்கள். இந்த ஆசனத்தைச் செய்வது மிகவும் எளிது. குழந்தை தூங்குவது போல உடலமைப்பை மாற்றினால் போதும். இது முடி உதிர்வை குறைக்கும்.
வஜ்ராசனம் செய்வதற்கு முதலில் யோகா தரை விரிபில் மண்டியிட்டு அமரவும். முழங்கால்களையும், கணுக்கால்களையும் ஒன்றாக நீட்டி பாதங்களை நேராக வைக்கவும். மூச்சை வெளியேற்றும் போது, கால்களின் மீது உட்காரவும். இடுப்பு, கணுக்கால் மற்றும் தொடை கெண்டைக்கால் பின் தசையின் மீது இருக்க வேண்டும்.
தொடைகளின் மீது கைகளை வைத்து, வசதியாக உட்காரவும். முதுகுத்தண்டு நேராக இருக்கும் நிலையில் உட்கார்ந்து, மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றவும். தலையைப் பயன்படுத்தி உடலை மேலே இழுத்து, முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் உள்ள எலும்பை தரையை நோக்கி அழுத்தவும். தலையை நேராக்கி முன்னோக்கி பார்க்கவும். கைகளை தளர்த்தி, உங்கள் உள்ளங்கைகளை தொடைகளின் மீது வைக்கவும்
அதோ முக ஸ்வனாசனா -யோகா விரிப்பானில் தரையை நோக்கி குனிந்து கைகளை நேராக நீட்டவும். கைகல், கால்கள் தரையில் நன்றாக பதிந்திருக்க வேண்டும். கைகளுக்கு இடையே ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும். அதாவது முட்டி போட்ட நிலையில் இருங்கள். வயிற்றை மேலே உயர்த்தியபடி பின்புறத்தை தள்ளி கால்களை நேராக்கவும். உங்களது கால்கள் தரையில் ஒட்டியபடியே இருப்பது அவசியம். மலை முகடு போன்று உடல் வடிவம் இருக்க வேண்டும்.
தற்போது தலையைக் கீழ் நோக்கிப் பாருங்கள். பத்து விநாடிகளுக்கு இந்த ஆசனத்தை செய்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்புங்கள். முட்டி போட்டு கைகளைத் தொடை பகுதிக்குக் கொண்டு வந்து வஜ்ராசனம் நிலைக்கு வரவும், ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.
சிரசாசனம் - தலைக்கீழாக நிற்பது இந்த யோகா.
யோகா செய்யும் முன் மருத்துவர்கள், சான்றிதழ் பெற்ற யோகா பயிற்றுநர்களின் உதவுயுடன் ஆலோசனை பெற்ற பிறகே யோகா செய்வது நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -