International Yoga Day 2024: தமிழ்நாடு முழுவதும் யோகா தின கொண்டாட்டம் - லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

யோகாவின் முக்கியத்துவம், நன்மைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடாப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் யோகா தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சேலத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சேலம் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர், மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகள் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட் ஐ.நா. சபை, 2014ம்ஆண்டு டிசம்பர் 11-ல் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோக தினத்தை அறிவித்தது. 2015ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரி கடற்கரை பகுதியில் யோகா தினம் கொண்டாட்டப்பட்டது. புதுச்சேரி காந்தி சதுக்கம் அருகே முதல்வர் ரங்கசாமி, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
யோகா பயிற்சியில் ஈடுபடும் மக்கள். 'Yoga for Women Empowerment.' என்பது இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாகும். பெண்களின் முன்னேற்றத்திற்காக யோகா என்பதற்கு இந்தாண்டு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்களின் உடல்நலன் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்தாண்டின் கருப்பொருள் அமைந்துள்ளது.
புதுச்சேரியில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வரிசையாக அமர்ந்து யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
யோகா ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மையை தருகிறது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் மற்றும் மனதின் சரியான செயல்பாட்டை தொடர்ச்சியாக யோகா செய்வதால் உறுதி செய்யலாம். புதுச்சேரியில் யோகா தின கொண்டாட்டம்.
மதுரையில் உள்ள ரெட் ஃபில்டு க்ரெவுண்ட் ரயில்வே காலனியில் அமைந்துள்ள பகுதியில் Shri Sharad Srivastava, Divisional Railway Manager யோக தின கொண்டாட்டத்தை முன்னெடுத்து நடத்தினார். இதில் இரயில்வே துறை ஊழியர்கள் அதிகாரிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -