Potato Cheese Balls : உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்.. குழந்தைகளுக்கு செய்து கொடுங்க!
தேவையான பொருட்கள் : 150-200 கிராம் சீஸ், 8 உருளைக்கிழங்கு, 2 வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 5 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), 100 கிராம் பிரட்தூள், 1/4 கப் சோள மாவு, 2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள், உப்பு தேவையான அளவு, எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து நன்கு மசித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதன் பின் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறிவிடவும்
5 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து உருளைக்கிழங்கு கலவையை ஆறவிடவும். அடுத்தது சீஸ் துண்டுகளை உருளைக்கிழங்கு இடையில் வைத்து உருண்டை பிடித்து கொள்ளவும்.
அடுத்தது, சோள மாவை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும். உருண்டைகளை சோள மாவு தண்ணீரில் நெனைத்து பிரட்தூள்களில் பிரட்டு எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், மிதமான சூட்டில் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -