வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் மூலிகை டீ - இதோ லிஸ்ட்!
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க சிரமப்படுவது உண்டு. ஆனல, சில மூலிகை உணவுப் பொருட்களை தினமும் உணவில் சேர்த்து வந்தால் தேவையில்லாத கொழுப்பு குறைவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மஞ்சள் - அரை டீ ஸ்பூன் மஞ்சள் தண்ணீரில் கலந்து குடிப்பது நல்லது. இதில் குர்குமின் நிறைந்திருப்பதால் கெட்ட கொழுப்புகளை எரிப்பதை துரிதப்படுத்துகிறது. தூங்குவதற்கு முன்பு தண்ணீர் அல்லது அரை டம்பளர் பாலில் மஞ்சள் பொடி சேர்த்து குடிக்கலாம். இது உடலின் வளர்ச்சிதை மாற்றம் மேம்பட உதவும்.
இஞ்சி - இஞ்சி உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்க உதவும். தண்ணீரில் இஞ்சி தட்டிப் போட்டு கொதிக்க விட்டு குடிப்பது நல்லது.
வெந்தயம் - வெந்தயம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி கொழுப்பை குறைக்க உதவுகிறது. இரவு தூங்க செல்வதற்கு முன்பு வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் நீர் குடிப்பது நல்ல பலன் அளிக்கும்.
பெருஞ்சீரகம் - சோம்பு அல்லது பெருஞ்சீரகமும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்க உதவும்.
ஓமம் - ஓமன் செரிமான திறனை மேம்பட உதவுகிறது. காலையில் ஓமம் தண்ணீர் குடிப்பது நல்லது.