International Coffee Day:சர்வதேச காபி தினம் உருவான வரலாறு தெரியுமா? இதோ சுவாரஸ்யமான தகவல்கள்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி காஃபி தினம் கொண்டாடப்படுகிறது. பிரேசிலியன் மொழியில் காஃபி எனும் பொருளில் இருந்துதான் காஃபி என்னும் பெயர் உருவானது. இதனை அடிப்படையாக கொண்டுதான் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் தமிழில் காஃபியை குளம்பி எனும் சொல்லால் குறித்தார். காஃபி தோட்டங்களை வாழ்வாதாரமாக கொண்டு வேலை செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , காபியில் உள்ள நற்குணங்களை எடுத்துரைக்கும் விதமாகவும்தான் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காஃபி தினம் கொண்டாடப்படுகிறது.
image 2
image 3
உலகில் அதிக அளவு மக்களால் விரும்பப்படும் ஒன்றாக காபி இருக்கிறது. காஃபி மட்டும்தான் சூடாகவும் , குளிர்ச்சியாகவும் குடிப்பதற்கு சிறந்த பானமாக இருக்கிறது.பால் சேர்த்து காஃபி குடிப்பதை விட ப்ளாக் காஃபி உடல்நலனுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.
காஃபி கி.பி 800 ஆண்டுகள் பழமையானது. உலகிலேயே பிரேசில்தான் அதிக அளவு காஃபி உற்பத்தி செய்கிறது. எத்தியோப்பியா நாட்டில் காஃபா (Kaffa) இந்த இடத்தில் முதன் முதலாக காப்பிச்செடி தோன்றியதாக நம்பப்படுகிறது.
காபியில் இரண்டு முதன்மை வகைகள் உள்ளன: அரபிகா மற்றும் ரோபஸ்டா. விவசாயிகள் பெரும்பாலும் அராபிகா வகைகளை பயிரிடுகின்றனர்.ரோபஸ்டா அதிக கசப்பு சுவையுடன் இருக்கும். சர்வதேசக காஃபி தினம் கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சர்வதேச காஃபி அமைப்புதான் தொடங்கி வைத்தது.காஃபி என்பது உண்மையில் ஒரு வகை காயோ பழமோ அல்ல. அது செர்ரி போன்றதொரு பழத்தின் விதை