International Carrot Day:சர்வதேச கேரட் தினம். முக்கியத்துவம், வரலாறு - தெரிஞ்சிக்கோங்க!
ஆண்டுதோறும் ஏப்ரல் 4 ஆம் தேதி சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகேரட்டை ஜேம் செய்யலாம், சேலட்களில் சேர்க்கலாம், ஜூஸ் போடலாம், பொறியல் பண்ணலாம், முகத்திற்கு பேஸ் மாஸ்காகப் போடலாம், கேக் செய்யலாம், இறைச்சி வகைகளுடன் சேர்த்து சமைக்கலாம். இன்னும் எத்தனை எத்தனை வகையில் பயன்படுத்தலாம்.
இலையுதிர் காலத்திலும் தான் கேரட் அதிகமாக விளையும் என்றாலும் கூட இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக எல்லா பருவ காலங்களிலும் அறுவடை செய்யப்படுகிறது.
உலகளவில் 85 சதவீத கேரட் கலிஃபோர்னியாவில் தான் உற்பத்தியாகிறது. நாம் அனைவரும் பரவலாக கேரட் செடியின் கீழ் வளரும் டேப் ரூட் வகையைச் சேர்ந்த கேரட்டை தான் சாப்பிடுகிறோம்.
கேரட்டுக்கு மேல் உள்ள கீரையும் சத்து நிறைந்ததுதான். பலரும் இதனை சாலட் வகைகளில் பயன்படுத்துகின்றனர். பரவலாக கேரட் ஆரஞ்சு நிறத்தில் மட்டுமே இருந்தாலும் கூட சில பிரதேசங்களில் கேரட் பர்ப்பிள், சிவப்பு, பேஸ்டில் மஞ்சள் நிறங்களிலும் விளைகிறது.
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -