Instant Noodles Masala:நூடுல்ஸ் மசாலா பொடி வீட்டிலேயே எளிதாக செய்யலாம் - இதோ ரெசிபி!
நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேவேளையில் அதன் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை காய்கறி பொரியலுக்கும் பயன்படுத்தலாம். எப்படி செய்வது என்று காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவீட்டிலில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்து இதை தயாரித்து விடலாம். பட்டை, சீரகம், கொத்தமல்லி விதை, மக்சள், பூண்டு, எண்ணெய், மிளகு ஆகிய இருந்தால் மட்டும் போதுமானது.
கடைகளில் கிடைக்கும் மசாலா பொடிகளை வைத்தும் இதை தயாரிக்கலாம். இல்லையென்றால் வீட்டிலேயே பொடி தயாரித்து அதன் பிறகு நூடுல்ஸ் மசாலா தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்களில் 100கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் இல்லாமல் சீரகம், பட்டை, கொத்தமல்லி விதை, மிளகு ஆகியவற்றை நன்றாக வதக்க வேண்டும். கரம் மசாலா தயாரித்து வைத்துகொள்ள வேண்டும், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக ஈரப்பத்தம் இல்லாமல் வதக்கி அதையும் பொடியாக தயாரிக்க வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, சீரகப் பொடி, மிளகுப் பொடி, சீரத்தூள், பட்டை தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், மிள்கு தூள், பூண்டு,வெங்காய தூள் எல்லாவற்றையும் சம அளவில் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்ளோதான். நூடுல்ஸ் மசாலா தயார். இதை உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், கோவக்காய் உள்ளிட்ட பொரியலுக்கு பயன்படுத்தலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -