Carrot Milk Shake : சத்துக்களும் வேணும்.. சுவையும் வேணும்.. ஈஸியா ஒரு கேரட் மில்க் செய்யலாம் வாங்க..
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என கூறப்படுகிறது. பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் பாதாமை தண்ணீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள தோலை நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் கேரட், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த கலவையை நன்கு குளிர வைக்க வேண்டும்.
பாலில் இருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது பால் ஊற்றி நன்கு மென்மையாக அரைக்க வேண்டும். இறுதியில் மீதமுள்ள பாலை ஊற்றி ஒருமுறை மிக்சியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து பரிமாறினால், சுவையான கேரட் மில்க் ஷேக் தயார்.
வைட்டமின் ஏ நம் உடலுக்கு அவசியமான மிக முக்கிய ஊட்டச்சத்து ஆகும். மனித உடலால் உருவாக்க முடியாத இந்த வைட்டமின் ஏ ஊட்டச்சத்தை நாம் உணவின் மூலம் மட்டுமே பெறமுடியும் என கூறப்படுகிறது.
விட்டமின் ஏ சத்து கேரட்டில் நிறைந்துள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -