Neem Tea: வேப்பிலை டீ மட்டும் போதும்.. நயன்தாராவின் ஊட்டச்சத்து நிபுணர் கொடுத்த பெஸ்ட் டிப்..
மழைக்காலத்தில் நோய் தொற்று அதிகமாக இருக்கும். அதனால் பலருக்கும் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் குடல் உணவை செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அதனால் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒவ்வொரு பருவம் மாறும் போது அதற்கென சில நன்மைகளும் உண்டு சில தீமைகளும் உண்டு. மழைக்காலம் வந்தால் வானிலை மிகவும் ரம்மியமாக இருக்கும். அதே சமயம் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அவை நோய் தொற்று பரவ செய்து அதிகமான ஆரோக்கிய சிக்கல்களையும் கொண்டு சேர்க்கும்.
சளி, காய்ச்சல், இருமல், குடல் தொற்று போன்றவை நாம் மழைக்காலங்களில் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள். அதனால் ஊட்டச்சத்து நிபுணர் நம் உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய பரிந்துரைக்கிறார்.
1 1/2 கப் தண்ணீரில் , 4-5 வேப்ப இலைகள், அரை இன்ச் நசுக்கிய இஞ்சி. இவை அனைத்தையும் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து சூடாக பரிமாறவும்.
மழைக்காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் நமது உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. இந்த சிறப்பான கிருமி நாசினி குடலை சுத்தப்படுத்தும், பாக்டீரியாக்களை அழிக்கும், நீரிழிவு நோயாளிகளின் அறிகுறிகளை கட்டுப்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பை கரைத்து இரத்த அழுத்தத்தை உடனடியாக குறைக்கும்.
அனைவருக்கும் ஆயுர்வேதம் என்ற புத்தகத்தின் படி வேம்பு நம் வாத மற்றும் நரம்பு மண்டலத்தில் உள்ள அனைத்து சிக்கல்களையும் சமநிலைப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -