Pumpkin seeds:பூசணி விதைகள் சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் என்னென்ன? தெரிஞ்சிக்கோங்க!
மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ளது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு அத்தியாவசிய தாதுக்கள் இருப்பதால் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபூசணி விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம், போன்ற பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் உணவிலும் பூசணி விதைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதை சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளை பெறலாம்.
அதிக மெக்னீசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஆரோக்கியமிக்க கொழுப்பு நிறைந்துள்ளதால் கல்லீரல் செயல்பாட்டிற்கு சிறந்ததாக கூறப்படுகிறது. இதனுடன் ஆளி விதைகளைச் சேர்ந்த்து உண்டால் பலம் இன்னும் அதிகரிக்கும்.பூசணி விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது அனைவருக்கும் சிறந்த தூக்கம் மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. தூக்கத்தை தூண்டும் செரொட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்க உதவும்.
அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.பூசணி விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அடங்கும். அவை மூளை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -