பெண்களின் கவனத்திற்கு..டேம்பான்ஸ் பயன்படுத்தும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!
முதலில் மாதவிடாய் காலங்களில் காட்டன் துணிகளைப் பயன்படுத்தி வந்தனர். பிறகு அதற்கு மாற்றாக நாப்கின்ஸ் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது மேலும் பல பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் டேம்பான்ஸ் மற்றும் மென்ஸ்டுரல் கப்கள் மங்கையரிடையே பெரியளவில் கவனத்தை பெற்றுள்ளது.
மாதவிடாய் நாட்களில் இயல்பாக உண்டாகும் அசெளகரியம் ஒருபுறம் இருக்க உதிரபோக்கை கையாளும் போதும் கூடுதல் அசெளகரியம் உண்டாகிறது.
டேம்போன்ஸின் ஒரு முனையில் நூல் இருக்கும். டேம்பான்ஸ் என்பது சிலிண்டர் வடிவில் பருத்தி பஞ்சுகள் சுத்தப்பட்டு பெண் பிறப்புறுப்புக்குள் பொருத்தப்படக்கூடிய பொருள். இதை பொருத்தி கொள்வதன் மூலம் டேம்பான்ஸில் உள்ள பஞ்சு, ரத்தபோக்கை உறிஞ்சுகொள்ளும்.
இவை முழுக்க பஞ்சுஇவை முழுக்க பஞ்சு பொதிகளால் ஆனதாக இருந்தாலும், சிலருக்கு பிறப்புறுப்பில் எரிச்சலை உண்டாக்கலாம். பொதிகளால் ஆனதாக இருந்தாலும் ஆரம்பத்தில் சிலருக்கு எரிச்சலை உண்டாக்க வாய்ப்புண்டு.
டேம்பான்ஸ் பயன்படுத்தும் போது நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக அதனை மாற்ற வேண்டும். இல்லையெனில், உதிரப்போக்கில் இருக்கும் ரத்தத்துடன் உடலில் இருக்கும் ஸ்டெஃப்பிலிக்காக்கஸ் என்னும் பாக்டீரியா கலந்து நச்சுத்தன்மை உண்டாகி, டாக்சிக் ஷாக் சின்ட்ரோம் என்னும் நோய் வருவதற்கு வாய்ப்புண்டு.
மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின், இதனை பயன்படுத்தலாம்.