Kaara Poli Recipe : மழைக்கால குளிருக்கு இதமாக காரசாரமான கார போளி..இன்றே ட்ரை செய்யுங்கள்..!
தேவையான பொருட்கள் மேல் மாவு செய்ய: மைதா - 1 1/2 கப், உப்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி. பூரணம் செய்ய: உருளைக்கிழங்கு - 3, கேரட் - 1, பீன்ஸ் நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, பச்சை பட்டாணி, உப்பு - 1 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 தேக்கரண்டி, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
ஒரு பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
4 விசில் வந்த பின் குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், கொதிக்கவிட்டு வற்ற வைக்கவும். தண்ணீர் வற்றிய பின் காய்கறிகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மசித்து வைத்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல் தேய்க்கவும். மசித்த காய்கறி கலவையை நடுவில் வைத்து சப்பாத்தியை மூடி மறுபடியும் சப்பாத்திப் போல் தேய்க்கவும்.
தவாவை சூடு செய்த செய்த சப்பாத்தியை அதில் போட்டு நெய் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும். அவ்வளவு தான் காரசாரமான கார போளி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -