Immunity booster Juice:நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உதவும் மேஜிக் ஜூஸ்? இதை ட்ரை பண்ணுங்க!
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அப்படியே உங்கள் உடலும் இருக்கும். அதாவது உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டீர்கள் என்றால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஹார்வேர்ட் பல்கலைக்கழத்தின் ஆய்வு ஒன்றில் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளான பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் எந்தவித பலனும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎன்னென்ன தேவை? நெல்லிக்காய் - 5 தேன் - தேவையான அளவு ஃப்ரெஷ் மஞ்சள் கிழங்கு - சிறிய துண்டு இஞ்சி - ஒரு சிறிய துண்டு தண்ணீர் - சிறிதளவு
நெல்லிக்காயை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். மஞ்சள் கிழங்கு, இஞ்சி ஆகியவற்றை தோல் நீக்கி எடுக்கவும். மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய், மஞ்சள், ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைத்ததும் வடிக்கட்டவும். இதோடு தேவையான அளவு தேன் கலந்தால் ஜூஸ் தயார்.
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பெரிய டம்ளர் அளவில் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளவும். பிறகு, சிறிது நேரம் கழித்து இதை குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் நெல்லிக்காய்க்கு திறன் அதிகம். மஞ்சள், இஞ்சியும் இதில் சேர்ப்பது கூடுதல் சிறப்பு.
நெல்லிக்காயில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக இயங்க செய்யவும் பாதுகாக்கவும் உதவுகிறது. சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -