Paneer Pasta: குழந்தைகளுக்கு பாஸ்தா பிடிக்குமா?பனீர் சேர்த்து செய்து பாருங்களேன்!
பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, வேக வைக்கும்போது இதை ஃபாலோ பண்ணுங்க. தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை சேர்க்க வேண்டும். கூடவே தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி வேண்டும். பின்னர் அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும். எல்லா வகையான பாஸ்தாவையும் இப்படி வேக வைக்கலாம்.
கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய், உப்பு பென்னே பாஸ்தாவை போட்டு நன்றாக வெந்ததும் வடிக்கட்டி எடுத்துகொள்ளவும். (5 நிமிடங்களில் பாஸ்தா வெந்துவிடும்.) அடுப்பில் மிதமான தீயில் வாணலி வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பனீர் துண்டுகளை கொட்டி ரோஸ்ட் செய்து தனியே எடுக்கவும்.
அதே வாணலியில் இரண்டு டேபிஸ் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதோடு, சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், பச்சை, மஞ்சள், சிகப்பு குடைமிளகாய் ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
காய் சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை வதக்கவும். காய்கறி நன்றாக வதங்கியதும் ரோஸ்ட் செய்த பனீர், வேகவைத்த பாஸ்தா சேர்த்து நன்றாக கிளறி சீஸ், வெங்காயத்தாள் சேர்த்து இறக்கினால் சுட சுட சீஸ் பனீர் பாஸ்தா ரெடி. இதே செய்முறையில், காளான், இறால் உள்ளிட்டவை சேர்த்தும் செய்தால் ருசியாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -