Night Overeating : ராத்திரியில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை எப்படி தவிர்ப்பது? இதோ ஈஸி டிப்ஸ்
காலை உணவை தவிர்க்கும்போது அந்த நாள் சோர்வு நிறைந்ததாக மாறும். அதனால் இரவில் அதிகம் சாப்பிட நேரிடும். எனவே காலை உணவை தவிர்க்காமல் இருப்பது நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறிய அளவில் அடிக்கடி உண்ணுதல் என்பதில் ஒரு சூட்சமம் உள்ளது. நீங்கள் ஒரு வேளை எவ்வளவு உண்பீர்களோ அதை சிறு சிறு போர்ஷனாக பிரித்துக் கொண்டு உண்ணுங்கள்.
தண்ணீர் அருந்துதல் உடலுக்கு பல்வேறு நன்மைகளைச் சேர்க்கும். நீங்கள் ஒரு நாளின் கடைசி வேளை உணவை உட்கொள்ளும் முன்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ப்ளர் தண்ணீர் அருந்திப் பாருங்கள். நீங்கள் நிச்சயமாக இரவில் அதிகம் உணவு உட்கொள்ள முடியாது.
உங்கள் காலை உணவில் நிச்சயமாக புரதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். புரதம் இருப்பதால் நிறைவான உணர்வத் தரும். மதியத்திலும் உணவில் பருப்பு, தானியங்கள் என ஏதேனும் புரதம் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
உணவை அவசர அவசரமாக உண்ணக் கூடாது. நன்றாக மென்று திண்ண வேண்டும்.
இதனால் மூளைக்கு நமக்கு சரியான நேரத்தில் வயிறு நிரம்பிவிட்டது என்ற சமிக்ஞையைத் தரும். அதுவே வேகமாக சாப்பிட்டால் நாம் அளவைக் கடந்து சாப்பிடுவோம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -