வெள்ளரிக்காய் கசக்குதா? எப்படி சரிசெய்வது? சில டிப்ஸ் இதோ!
வெள்ளரிக்காயின் கசப்புக்கு காரணம் அதிலிருக்கும் கியூக்கர்பிட்டாசின் என்னும் காம்பவுண்ட் தான். இயற்கையாக உள்ள இந்த கியூக்கர்பிட்டாசின், வெள்ளரிக்காயில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தினால் சுவையில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது.கியூக்கர்பிட்டாசின் அளவு அதிகமாக இருந்தால், சுவை கசப்பாக இருக்கும். பழம்/காய்கறி எவ்வாறு வளர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து கியூக்கர்பிட்டாசின் அளவு சார்ந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎளிமையாகச் சொல் வேண்டும் என்றால், கெட்டுப்போனதற்கான அறிகுறி தென்படும் வரை, மிதமான கசப்பான வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் கியூக்கர்பிட்டாசின் அளவு அதிகமாக இருந்தால், அது சிலருக்கு அஜீரணம், வயிற்றில் அசௌகரியம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
வெள்ளரிக்காயின் கசப்பை நீக்கும் மிகவும் பிரபலமான செயல்முறைகளில் ஒன்றாகும். விளிம்புகளை வெட்டி வெள்ளரிக்காய் மீது தேய்க்கவும். நல்ல அதிக அளவு வெள்ளை, நுரை போன்ற பொருட்கள் வெளியேறுவதை நீங்கள் காண்பீர்கள். அப்பகுதியை துண்டாக்கி அகற்றவும்.
கியூக்கர்பிட்டாசின் தோலில் தான் அதிகளவில் வளரும். அதனாக் வெள்ளரியை உங்களது உணவில் சேர்ப்பதற்கு முன் அதை தோலை அகற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. வெள்ளரியை வெட்டி அதில் சிறிதளவு வினீகர் அல்லது எலுமிச்சை சாறினை கலந்து 10ம்நிமிடங்களுக்கு ஊர விடவும். வினீகர் அல்லது எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலமானது வெள்ளரிக்காயின் கசப்பை நீக்கும்.
எலுமிச்சை சாறு போலவே உப்பும் வெள்ளரிக்காயின் கசப்பை குறைக்கும். சிறிதளவு உப்பு சேர்த்து அதை 30 நிமிடங்களுக்கு ஊர விடவும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும். அதனால் சுவையான மொறுமொறுப்பான வெள்ளரிக்காய் கிடைக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -