Mango Rava Kesari Recipe: சுவையான மாம்பழ ரவா கேசரி செய்வது எப்படி?ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: மாம்பழம் - 1 , ரவா - 1/2 கப், தண்ணீர் - 2 கப், சர்க்கரை - 3/4 கப், நெய் - 7 மேசைக்கரண்டி, முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் மாம்பழத்தை தோலை நீக்கி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுத்தது ரவையை பானில் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது பானில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறவும்.
ரவா கெட்டியான பதத்திற்கு வந்ததும், அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடம் மீதமான தீயில் கிளறிவிடவும். அடுத்தது சர்க்கரை சேர்த்து கிளறவும்.
சர்க்கரை கரைந்ததும், 5 நிமிடத்துக்கு பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். சரியாக 2 நிமிடத்திற்கு பிறகு நெய் சேர்த்து கிளறவும்.
நெய் சேர்த்து 15 நிமிடத்திற்கு மீதமான சூட்டில் ரவையை கிளறி விடவும். கடைசியாக 2 டீஸ்பூன் நெய், வறுத்த முந்திரி திராச்சை, குங்குமப்பூ சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் அற்புதமான மாம்பழ ரவா கேசரி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -