Washing Machine : உங்க வீட்டு வாஷிங் மெஷினின் ஆயுட் காலத்தை நீட்டிக்க டிப்ஸ்!
வாஷிங் மெஷினின் ஆயுட்காலம் எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து மாறும். தினசரி வாஷிங் மெஷினை பயன்படுத்தினால் அதன் உள் பாகங்கள் தேய்ந்து பழுதாகிவிடலாம்.
துணிகளை அடுத்தடுத்து போடாமல் 40-60 நிமிடங்களுக்கு ஓய்வு கொடுத்த பின்பே மெஷினை பயன்படுத்தவும்.
வீட்டில் அதிக நபர்கள் இருந்தால் தினமும் அதிக முறை மெஷினை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் சிறந்த பிராண்டில் வாஷிங் மெஷின் வாங்குவது நல்லது.
அதிகமாக மெஷினை பயன்படுத்துவதால் மின் கட்டணம் உயரலாம். பொதுவாகவே எலக்ட்ரானிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது ஆபத்தை உண்டாக்கலாம்.
மெஷினை அதிகம் பயன்படுத்துவதால் டிரம், எலக்ட்ரானிக் பாகங்கள், மிஷின் மோட்டார் உள்ளிட்டவை சேதமடைந்து செயல்பாடு குறையலாம்.
வாஷிங் மெஷினை ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்துங்கள் . அதே போல் மெஷினில் ஓவர்லோட் செய்ய வேண்டாம் . 6 மதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்யுங்கள். இப்படி செய்தால் மெஷினின் ஆயிட்காலம் நீடிக்கலாம்.