Kidney Stones : சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
சிறுநீரக கற்களை அகற்றுவதற்கான மிகச் சிறந்த வழி நீரேற்றமாக இருப்பது.ந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் தினமும் 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இது பருவகாலமாக மாறுபடும் - கோடையில், நாம் அதிகமாக வியர்க்கிறோம், எனவே இழந்த திரவங்களை நிரப்ப அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
செயற்கை இனிப்புகள் மற்றும் பிரக்டோஸ் ஆகியவற்றால் நிரம்பியுள்ள குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
உங்கள் தினசரி உணவில் எலுமிச்சை சேர்த்து கொள்ளுங்கள்.
உங்கள் உணவில் அதிகப்படியான சோடியம் சிறுநீரில் கால்சியம் படிகங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே குறைவான உப்பை எடுத்து கொள்ளுங்கள்.
பால் போன்ற கால்சியம் நிறைந்த பொருட்களை மிதமாக உட்கொள்வது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சில ஆக்சலேட் நிறைந்த உணவுகள் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை எடுத்து கொள்வது நல்லது.
ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் பார்லி நீர் ஆகியவை சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. எனவே அதனை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.