Hair Care: ஆரோக்கியமான தலைமுடி வளர, தலைமுடி வெடிப்பு... தவிர்க்கும் வழிமுறைகள்!
தலைமுடி பிரச்சனையில் ஏராளமானது இருக்கும். அதில் தலைமுடி வெடிப்பும் ஒன்று. தலைமுடி வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்று காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசூரிய ஒளி, தூசி, சுற்றுப்புறத் தூய்மையின்மை போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் தலைமுடி வறண்ட தன்மையை அடைந்து வெடிப்படையும். வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். தலை குளிக்க வேண்டும். தலையில் அழுக்கு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
தலைமுடியை சீவுவதற்கு தரம் வாய்ந்த சீப்பை பயன்படுத்தவும். தலை குளித்தவுடனேயே தலை சீவ கூடாது. இதனால் முடி உடையும். பாதிக்கப்படும்.
தலை அதிகம் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, சீரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். சிக்கு எடுக்க பெரிய பல் இருக்கும் சீப்பை பயன்படுத்தவும்.
தலைமுடியை ஸ்ட்ரெய்ட் செய்யும்போது தலைமுடி ஈரமாக இருக்க கூடாது. இது முடி வெடிப்பிற்கு காரணமாகிவிடும். அதேபோல அதிகம் வெப்பம் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஹேர் ட்ரையர் பயன்படுத்தும்போது அதிகம் சூடு இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். தலை முடி பராமரிப்பது போலவே அதன் ஆரோக்கியத்தை பாதுக்க உள்ளிருந்து சரிசெய்ய வேண்டும். அதற்கு ஊட்டச்சத்து முகிந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -