Egg Shell Uses : முட்டை ஓட்டை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா?
வீட்டில் பயன்படுத்தும் கத்திரிக்கோல் சரியாக வெட்டவில்லை என்றால், அதை பயன்படுத்தி முட்டை ஓடுகளை சிறு துண்டுகளாக நறுக்கினால் கத்திரிக்கோல் கூராகிவிடும்.
முட்டை ஓடுகளை சின்னதாக நறுக்கி பாத்திரம் விலக்கும் சோப்போடு சேர்த்து பாத்திரங்களை விலக்கினால் அடிபிடித்த கறைகள் நீங்கிவிடும்.
மிக்ஸி ஜார் பிளேடில் உள்ள சிறு கறைகளை போக்க, முட்டை ஓடுகளை நன்கு கழுவி ஜாரில் போட்டு சிறிதளவு பாத்திரம் விலக்கும் லிக்விட் சேர்த்து அரைத்தால் ஜார் பளபளப்பாக இருக்கும்.
முட்டை ஓட்டில் கால்சியம், ப்ரோட்டீன் உள்ளது. இதனை தூக்கி எறியாமல் மாவு பதத்தில் அரைத்து பறவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
வீட்டில் தோட்டம் வைத்திருந்தால் அல்லது மாடி தோட்டம் வைத்திருந்தால் முட்டை ஓடுகளை அந்த செடிகளுக்கு உரமாக போடலாம்.
நாய் வளர்ப்பவர்கள் கேல்சியம் சப்ளிமென்ட் கொடுப்பதற்கு பதிலாக, இந்த முட்டை ஓடுகளை கழுவி வெயிலில் காயவைத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து நாய்கள் சாப்பிடும் உணவுகளில் கலந்து கொடுக்கலாம்.