Kitchen Tips:பூண்டு தோல் உரிப்பது இனி எளிதாகிவிடும் - இதோ டிப்ஸ்!
ஜான்சி ராணி | 17 May 2024 03:42 PM (IST)
1
பூண்டு உரிப்பது என்பது சற்று சிரமமான வேலைதான். சிலருக்கு பூண்டு உரித்தால் நகம் வலிக்கும்
2
கத்தியை பயன்படுத்தி பூண்டு உரித்தாலும் நீண்ட நேரம் ஆகும். பூண்டை உடைத்து பற்களாக எடுத்துக்கொள்ளவும்.
3
பின் மூடி உள்ள ஒரு சில்வர் பாக்ஸில் பூண்டு பற்களை போட்டுவிட்டு ஒரு நிமிடத்திற்கு நன்றாக குலுக்கி கொள்ள வேண்டும்.
4
பின் மூடியை திறந்து பூண்டு பற்களை எடுத்து பார்த்தால் சில பூண்டு பற்களின் தோல் முழுவதுமாக உரிந்து வந்து இருக்கும்.
5
சில பற்களின் தோல் பாதியளவு நீங்கி இருக்கும். இந்த தோலை எளிதில் எடுத்து விடலாம்.