Mutton : வெள்ளாட்டு கறியா? செம்மறி ஆட்டு கறியா? இதில் எது சிறந்தது?
அனுஷ் ச | 17 May 2024 02:42 PM (IST)
1
வெள்ளாட்டு கறி, வெள்ளை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். செம்மறி ஆட்டு கறி சிவப்பு நிறத்தில் காணப்படும்.
2
செம்மறி ஆட்டு கறியில் பிரியாணி செய்தால் சுவை அற்புதமாக இருக்கும். வெள்ளாட்டு கறி, குழம்பு வறுவலுக்கு ஏற்றது.
3
வெள்ளாட்டு கறியை விட செம்மறி ஆட்டு கறியில், கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அதனால் உடல் எடை அதிகரிலாம்.
4
இதயம் சார்த்த பிரச்சினைகள் உள்ளவர்கள் செம்மறி ஆட்டு கறியை தவிர்க்கவும். வெள்ளாட்டு கறியையும் மிக குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
5
வெள்ளாட்டு கறியோ, செம்மறி ஆட்டு கறியோ எது வாங்கினாலும் கொழுப்பை நீக்கிவிட்டு வாங்குங்கள். இப்படி செய்தால் உடம்பில் கொழுப்பு அதிகம் சேராது.
6
சிறு பிள்ளைகளுக்கு எந்த கறியாக இருந்தாலும் ஆட்டின் நெஞ்சு கறி, நெஞ்சிற்கு பின் பகுதியில் உள்ள கறி, கழுத்து கறி கொடுக்கலாம்.