Tips To Prevent Cockroaches : வீட்டில் கரப்பான் பூச்சி வராமல் இருக்க இதை பண்ணுங்க!
கரப்பான் பூச்சிகள் எப்போதும் சுத்தம் இல்லாத இடத்தில்தான் வரும். நாம் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்தாலே கரப்பான்கள் வருவதை தவிர்க்க முடியும்.
சாப்பிட்டு முடித்த உடன் மீதம் உள்ள சாப்பாட்டை மூடி வைக்கவும் மற்றும் குப்பைகளை தினமும் அகற்றி விடவும். இதன் வாசனையால் கரப்பான் பூச்சிகள் வரும்.
சமைத்த பாத்திரத்தை இரவில் கழுவாமல் சிங்கிள் போட்டு வைப்பதால் கரப்பான்கள் வருகின்றன. முடிந்த வரை பாத்திரங்களை கழுவி விடுங்கள் அல்லது எதாவது துணி போட்டு மூடி வைத்துவிடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் ஷாம்பு, வினிகர், சர்க்கரை, தண்ணீர் ஊற்றி நுரை வராதவாறு கலந்து கொள்ளவும். அந்த கலவையை வீட்டில் கரப்பான்கள் வரும் இடத்தில் தெளித்துவிடவும். இந்த கலவை கரப்பான்களை கொன்று விடும்
கரப்பான்கள் அதிகம் வரும் இடங்களில் கற்பூரத்தை போட்டு விடுங்கள். கற்பூர வாசனைக்கு கரப்பான்கள் வராது.
பேக்கிங் சோடா, முகத்திற்கு பயன்படுத்தும் பவுடர் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து கலந்துக் கொள்ளவும். அதை ஒரு டிஸ்யூ (Tissue) பேப்பரில் கட்டி வீட்டில் உள்ள இடுக்குகளில் போட்டால் துர்நாற்ட்டம் வராது கரப்பான்களும் வராது