Mango Ice Cream : ஐஸ் க்ரீம் ப்ரியரா ? வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்து அசத்துங்க - ரெசிபி!
முதலில் மாம்பழங்களை அலசி விட்டு அதன் தோலை நீக்கி பழத்தை துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது மாம்பழ துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து மாம்பழ பல்ப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து, பால் ஊற்றி அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்த பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் கார்ன் பிளார் சேர்த்து அதில் சிறிது பால் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து அதனை காய்ச்சிய பாலில் சேர்க்க வேண்டும்.
நன்றாக மிக்ஸ் செய்து சிறிது நேரம் கொதிக்க வைத்து விட்டு, சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து அடுப்பில் இருந்து சாஸ் பான் ஐ எடுத்து விட வேண்டும்.
பாலை நன்றாக ஆற வைக்க வேண்டும். பால் ஆறியதும், மாம்பழ பல்ப் மற்றும் மாம்பழ எசன்ஸ் ஒரு துளி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும் .
இந்த கலவையை அப்படியே ஃப்ரீசரில் வைத்துவிட்டு , பின் ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஸ்கூப் வைத்து எடுத்து சின்ன பௌல்களில் வைத்து எடுத்தால் மேங்கோ ஐஸ்க்ரீம் தயார்.இந்த மாம்பழ கலவையை குல்பி மோல்டுகளில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து 3 மணி நேரத்திற்கு பின் எடுத்து அதில் ஐஸ் க்ரீம் ஸ்டிக் செருகினால் குல்பி ரெடி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -