Crab Soup : வீட்டிலே சுவையான நண்டு சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : 4 நண்டு கால்,1 கப் சின்ன வெங்காயம், 1 மேஜை கரண்டி நல்லெண்ணெய, இஞ்சி சிறிதளவு, 6 பல் பூண்டு, 1/4 தேக்கரண்டி சோம்பு, 10 கறிவேப்பிலை, 1 தக்காளி, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 1.5 லிட்டர் தண்ணீர்,1 தேக்கரண்டி நெய், 1/2 கப் கொத்தமல்லி இலைகள், மிளகு, சீரகம், சோம்பு ஆகியவை ஒரு தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: நண்டு காலை சுத்தம் செய்து இடிக்கல்லால் நண்டின் ஓடுகளை இடித்து கொள்ளவும். அம்மியில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி அனைத்தையும் கொரகொரவென அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் சோம்பு, கருவேப்பிலை சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும். இதில் இடித்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் , சின்ன வெங்காயம் கலவையோடு சிறிது உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
பின் நண்டு கால்களை சேர்த்து பிரட்டி விடவும் அதோடு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். சிறிது தீயில் அரை மணி நேரம் வேக வைக்கவும்.
சீரகம், சோம்பு, மிளகு மூன்றையும் அம்மியிலோ அல்லது மிக்ஸியிலோ கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.
அரைமணி நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து அரைத்து வைத்த பொடியை சேர்த்து சூப்பில் கலந்து விடவும். சிறிது நேரத்திற்கு பின், அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லியை தூவி விட்டால் சுவையான நண்டு சூப் தயார் ஆகிவிடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -