Banana Smoothie: ஊட்டச்சத்து நிறைந்த வாழைப்பழம் ஸ்மூத்தி ரெசிபி!
முதலில் வாழைப்பழத்தை ஒரே மாதிரியான அளவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி அதில் முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவை சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பிளெண்டரில் வெட்டி வைத்துள்ள வாழைப்பழம், முந்திரி பாதாம், திராட்சை மற்றும் தேன் ஆகியவை சேர்த்து பேஸ்ட் போன்று செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பௌலில் எடுத்து அதில் யோகர்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் சிறிது ஏலக்காய்த் தூள் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
இப்போது வாழைப்பழ ஸ்மூத்தியை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் சில வாழைப்பழ துண்டுகள் மற்றும் பொடித்த பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறினால் வாழைப்பழ ஸ்மூத்தி தயார்.
அனைத்து ரக வாழைப்பங்களில் இருக்கும் சத்துக்களையும் பெற அவ்வப்போது வேறு வேறு வகையான வாழைப்பழங்களில் ஸ்மூத்தி தயாரித்து சாப்பிடலாம்.
ஒவ்வொன்றும்ம் தனி தனி சுவைகளையும் சத்துக்களையும் கொண்டது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
பசியில் இருக்கும் போது இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் போதும் பசி தீர்ந்து விடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -