Flour : நீண்ட நாட்களுக்கு மாவு கெடாமல் இருக்க என்ன செய்வது? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!
உமா பார்கவி | 16 Feb 2023 12:24 PM (IST)

மைதா மாவு
1
அனைவரின் வீடுகளிலும் மாவு மிகவும் அத்தியாவசியமான சமையல் பொருளாகும். இது பெரும்பாலும் மொத்தமாக வாங்கக் கூடிய பொருளாகும்.
2
முறையாக மாவை, டப்பாக்களில் அடைத்து வைக்காமல் இருந்தால், அதன் சுவை மற்றும் கெடும்.
3
அதனால், மாவு பாக்கெட்டை திறந்தவுடன் உலர்ந்த மற்றும் காற்று புகாத டப்பாக்களிலும், கண்ணாடி பாட்டில்களிலும் மாற்றுவது நல்லது.
4
டப்பாக்களில் மாவை வைத்தாலும் அந்த டப்பாவை உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம்.
5
சமைப்பதற்கு மாவை எடுக்கும்போது, ஈரமான கைகளால் மாவை தொடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
6
பாதாம், ஓட்ஸ், கோதுமை, மைதா மாவுகளை மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் சேமித்து வைத்தால் சுமார் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.