Sweet Potato Halwa : நாவில் வைத்தால் கரையும் சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா..செய்முறை இதோ!
3 சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்கு கழுவி எடுத்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி குக்கரில் சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்தவுடன் இறக்கி தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அதே கடாயில் மசித்து வைத்துள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கட்டியில்லாமல் மீண்டும் ஒருமுறை கரண்டியால் மசித்து விட்டு, இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது அதே கடாயை கழுவி விட்டு அடுப்பில் வைத்து அதில் ஒரு மீடியம் சைஸ் டம்ளரில் முக்கால் கப் அளவு தண்ணீரை ஊற்றவும்.
இப்போது முக்கால் கப் பொடித்த சர்க்கரை, அல்லது சர்க்கரையை 1 நிமிடம் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் தண்ணீரில் சேர்த்து உருகியதும் வடிகட்டி எடுத்து மீண்டும் கடாயில் சேர்த்து சற்று கொட்டிப்பதம் வறும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின் மசித்து வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை இதில் சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி விட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா ரெடி. இதன் சுவை வேற லெவலில் இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -