Positive Home : வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
வீட்டை எப்போதும் வெளிச்சமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஜன்னல்கள், கதவுகள் வழியே சூரிய ஒளி வரும் அளவிற்கு கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.
வாசலில் தினமும் கோலம் போட வேண்டும். வீட்டுக்குள் வருபவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைக்கும்.
வீட்டில் பூ செடிகளை வளர்க்கலாம். மணி பிளான்ட், ரோஜா செடிகள் வளர்க்கும் போது வீட்டில் எப்போதும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும்.
வீட்டில் துர்நாற்றம் அடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல நறுமணம் நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கும் . வாரம் ஒரு முறை வீட்டை சுத்தம் செய்து சாம்பிராணி போடலாம்
ஊக்கமளிக்கும் வாசகங்களை வீட்டின் சுவரில் கண்களில் படும்படி மாட்டி வைத்தால், அதை படிக்கும் போது பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்.
வீட்டின் சுவர் அழுக்காக இருந்தால் நெகடிவ் எண்ணங்கள் தோன்றும். அதனால் சுவரில் பெயிண்ட் அடிக்கலாம் அல்லது சுவரில் புகைப்படங்களை மாட்டி வைக்கலாம்.