Beetroot Chapati : குழந்தைகளுக்கும் இது ரொம்ப பிடிக்கும்.. பீட்ரூட் சப்பாத்தி செய்து அசத்துங்க!
தேவையான பொருட்களை : பீட்ரூட் - 1 துருவியது , கோதுமை மாவு - 2 கப் (250 மி.லி) , உப்பு - தேவையான அளவு, சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, கசூரி மேத்தி - 2 தேக்கரண்டி, ஓமம் - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது , எண்ணெய், நெய், தண்ணீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: துருவிய பீட்ரூட், பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, ஓமம் அனைத்தையும், அரைத்து வைத்துள்ள பீட்ரூட் விழுதுடன் சேர்க்கவும். இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை 30 நிமிடம் ஊற வைக்கவும்.அதன் பின் மாவை உருண்டை பிடித்து கொள்ளவும்.
உருண்டை பிடித்த மாவை சப்பாத்தி கட்டையில் வட்டமாக தேய்த்து எடுத்துக்கொள்ளவும். தேய்த்த சப்பாத்திகளை தோசை கல்லில் போட்டு எடுக்கவும்.
இருபுறமும் வெந்து வரும் வேளையில் சிறிதளவு நெய் ஊற்றி இறக்கவும். உங்களுக்கு பிடித்த கிரேவியுடன் சத்தான பீட்ரூட் சப்பாத்தியை பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -