பாத்திரங்களில் அடி பிடித்த கறைகளை எளிதில் அகற்ற உதவும் டிப்ஸ்!
சமைக்கும் போது பால் பாத்திரம் உள்ளிட்டவை கடுமையாக அடிபிடித்து விட்டதா? இதை கஷ்டப்பட்டு தேய்த்து கழுவ வேண்டாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடிபிடித்த இடம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும். இதில் அரை டீஸ்பூன் பேங்கிங் சோடா சேர்க்கவும். இரண்டு ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து, இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்துக்கொள்ளவும்.
தண்ணீர் சூடானதும் ஒரு ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்விடை சேர்க்கவும். இப்போது ஒரு கரண்டியை கொண்டு பாத்திரத்தின் அடிப்பிடித்த பகுதிகளை சுரண்டி விட வேண்டும்.
இப்போது பாத்திரத்தில் உள்ள நீர் பால் போல் பொங்கி வரும். தொடர்ந்து கரண்டியால் சுரண்டி விடவும். பின் அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தில் உள்ள தண்ணீரை கீழே கொட்டிவிடவும்.
இப்போது பாத்திரத்தை ஒரு கரித்துணியால், பிடித்துக் கொண்டு பாத்திரம் சூடாக இருக்கும்போதே, கம்பி நார் கொண்டு அடிபிடித்த பகுதியை லேசாக தேய்த்தாலும் அந்த கறைகள் நீங்கி விடும்
இப்போது பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளிச்சென இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -