Home Remedy:கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கா? குணமாக வீட்டிலேயே இதை தயாரிக்கலாம்!
ஜான்சி ராணி | 18 May 2024 04:03 PM (IST)
1
கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுத்தற்கான காரணங்கள் இருக்கலாம். முதலில் அதை கண்டறிய வேண்டும். தூக்கமின்மை உள்ளிட்டவற்றால் ஏற்பட்டால் அதற்கு கிரீம்களின் மூலம் தீர்வு காண முடியும். வீட்டிலேயே தயாரிக்கும் க்ரீம்களை காணலாம். காஃபி பவுடர், தேன் ஆகிய இரண்டையும் சேர்த்து பேக் செய்து போட்டு வரலாம்.
2
காஃபி பவுடர் ஒரு டீஸ்பூன், தேன் சில துளிகள், இதோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி கண்களுக்கு கீழே தடவலாம். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால் நல்லது என்கிறார்கள்.
3
இதோடு, பாதாம் எண்ணெய் சேர்த்து தடவலாம்.
4
வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்தும் பயன்படுத்தலாம். இது கருவளையத்தின் பாதிப்பை குறைக்கும்.
5
கண்களை குளிர்ச்சியாக வைத்துகொள்ள வெள்ளரி வைக்கலாம். விளக்கெண்ணெய் தடவலாம்.