இனிப்பு சாப்பிடும் ஏக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி? இதோ டிப்ஸ்
துபோன்ற சுகர் கிரேவிங் என்பது மிகக் குறைந்த கலோரி டயட் உட்கொள்ளுதல், மோசமான குடல் நலம், குறைவான தூக்கம், புரத பற்றாமை, வைட்டமின் பி12, குரோமியம் குறைபாடு, போதிய தண்ணீர் அருந்தாமை போன்ற பல காரணங்களால் சுகர் கிரேவிங்ஸ் ஏற்படும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிகப்படியாக இனிப்பு சாப்பிடும்போது அதனால் உடல் பருமன், வீக்கங்கள், லைஃப்ஸ்டைல் நோய்கள் ஆகியன ஏற்படும். சர்க்கரை வியாதி, பிசிஓடி, தைராய்டு போன்ற லைஃப்ஸ்டைல் நோய்கள் உண்டாகும்.
உணவு இடைவேளையை அதிகமாக்காதீர்கள். நீண்ட நேரம் உண்ணாமல் இருந்துவிட்டு உணவு உட்கொள்ளும்போது அது கார்போஹைட்ரேட்ஸை அதிகமாக உண்ணத் தூண்டும்.
உணவில் நீர் ஆகாரம் அதிகம் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். மோர், லெமன் வாட்டர், பழங்கள் சேர்த்த தண்ணீர், காய்கறி ஜூஸ் ஸ்மூத்தி ஆகியனவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
நொதிக்க வைத்த உணவு சேர்க்கலாம். முராபா, வீட்டில் தயாரித்த ஊறுகாய், கேரட் அல்லது அரிசி கஞ்சி, இட்லி, தோசை, தோக்லா ஆகிய உணவுகள் குடல் நலத்திற்கு நல்லது.
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், ஸ்டீவியா, அத்திப் பழம், ப்ரூன்ஸ், பேரிச்சம்பழம், ஏப்ரிகாட்ஸ், கருப்பு திராட்சை ஆகியன சேர்த்துக் கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் நோய்களை தவிர்க்க எளிய வழி நம் வாழ்க்கை முறையை பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வது தான்.
உணவு, அன்றாடம் உடற்பயிற்சி, போதிய ஓய்வு இருந்தால் போது எல்லா நோய்களும் எட்ட நின்று வேடிக்கை பார்க்கும்.
ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரமாவது நல்ல தூக்கம் அவசியம். மனச்சோர்வு அழுத்தம் தவிர்க்க வேண்டும். இவை உங்கள் சுகர் கிரேவிங்ஸை இன்னும் அதிகமாக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -