Smartphone Addiction : ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அடிக்கடி போனை எடுத்து பார்ப்பதற்கு முதல் காரணம் நோட்டிபிகேஷன் (Notification). அதனை ஆஃப் பண்ணி வைக்கவும் அல்லது போனை சைலென்டில் போடவும்.
ஸ்மார்ட் போனுக்கென இவ்வளவு நேரம்தான் செலவிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவைப்படும் போது மட்டும் போன் பேசவும்.
படிக்கும் போதும் வேலை செய்யும் போதும் ஸ்மார்ட் போன் கண்ணில் படாதவாறு வைத்து விடுங்கள். எதாவது ஒரு ரூமில் அல்லது கபோர்டில் வைத்து பூட்டிவிடுங்கள்.
ஏதேனும் கால் அல்லது நோட்டிபிகேஷன் வரும் பட்சத்தில் அப்படியே போனை பயன்படுத்த தொடங்கிவிடுவோம். அதனால் தூங்கும் போது போனை ஆஃப் பண்ணிவிட்டு தூங்குங்கள்.
போனில் வரும் அனைத்து மேசேஜ்களுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவையான மேசேஜ்க்கு மட்டும் ரிப்ளை பண்ணினால் போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க முடியும்
ரொம்ப முக்கியமான வேலை செய்யும் போது சைலென்டில் போட்டுவிடுங்கள் அல்லது ப்ளைட் மோடில் போட்டுவிடுங்கள். இவ்வாறு செய்வதால் தினசரி போன் பயன்படுத்துவதை குறைக்கலாம்.