கண்ணுல கண்ணீர் வராம வெங்காயம் வெட்டனுமா? இதை படிங்க!
நம் வீடுகளில் வெங்காயம் இல்லாத சமயலே கிடையாது. ஆனால் வெங்காயம் வெட்டும்போது வெங்காயத்தின் நெடியினால் நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்பதுதான். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், கண்ணீர் வருவதற்கும் காரணம்.
இந்நிலையில் வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் வைத்து கொண்டு வெட்டலாம் அல்லது தண்ணீரில் ஊற வைத்த பின், அதனை எடுத்து வெட்டலாம்.
வெங்காயம் வெட்டுவதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன் ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும்.
வெங்காயத்தை நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தடவி வெட்டினால், கண்களில் இருந்து கண்ணீர் வராது.
வெங்காயம் வெட்டும்போது, அருகில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வெட்டலாம். மேற்கண்ட குறிப்பை ஃபாலோ செய்தால் வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வராமல் இருக்கும்.