Weight Loss:இளநீர், தேங்காய் தண்ணீர் டயர்ட்டில் சேர்ப்பது உடல் எடையை குறைக்க உதவுமா?
உடல் எடை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் அடிக்கடி இளநீர் குடிப்பது உதவுமா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் வழங்கும் அறிவுரை களை காணலாம்.
கடுமையான டயட், சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது பரிந்துரைக்கப்பட்டுகிறது. ஆனால், உடல் எடை குறைப்பது என்பது ஒவ்வொருவரின் உடல்நிலை உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப வேறுபடக்கூடியது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கலோரி குறைந்த உணவுகளை தேர்வு செய்து சிறந்தது. அப்படிதான், இளநீரும் குறைந்த கலோரி கொண்டது. ஒரு க்ளாஸ் இளநீரில் 44 கலோரி மட்டும் இருக்கிறது. ஆனால், இதோடு தேன்,உள்ளிட்டவற்றை ஏதாவது சேர்ப்பது கலொரியை அதிகரிக்க செய்யும்.
அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இளநீர், தேங்காய் ஃபைபர் நிறைந்தது. 100 கிராம் தேங்காயில் 9 கிராம் டயட்ரி ஃபைபர் இருக்கிறது. தேங்காய் தண்ணீர்,தேங்காய ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது.
தேங்காய் தண்ணீர் இளநீர், தேங்காய் ஆகியவை உணவு செரிமானத்திற்கு உதவும். இதிலுள்ள நார்ச்சத்து உணவிலுள்ள சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவும். தினமும் தேங்காய் தண்ணீர் குடித்து வர செரிமான கோளாறுகள் நீங்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.