Health Tips:மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் வழிமுறைகள்!
மழைக்காலத்திற்கான உணவுப் பழக்கங்கள் குறித்து ஆயுர்வேத மருத்துவம் அளிக்கும் பரிந்துரைகள் சிலவற்றை இங்கே காணலாம். இது மழை நாட்களிலும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபால் பொருட்கள்: பால் சார்ந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளிர்ந்து இருக்குமானால் அதை சாப்பிட வேண்டாம். சிலருக்கு செரிமான பிரச்சனைகளை உருவாக்கலாம். குளிர்பானங்கள் - குளிர்பானங்கள் அருந்துவதை குறைப்பது நல்லது. ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து ஜூஸ், பழங்கள் உளிட்டவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சோடா அருந்துவதை தவிக்கலாம். இதை அதிகம் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்பட்டும்.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்: எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்ப்டிவதை தவிர்க்க வேண்டும். இது செரிமான மண்டலம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் - பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்பு, துரித உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனம் அடைய செய்யும்.
சமைக்காத உணவுகள் - சால்ட், காய்கறிகளை வேகவைக்காமல் சாப்பிடுவது உள்ளிட்டவறை தவிர்க்கலாம். மழை காலத்தில் வெப்பம் அதிகம் இருக்காது.செரிமானத்திற்கான ஆற்றல் குறைவாக இருக்கும் என்பதால் உணவுகளை நன்றாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -